ஆத்தூர் சீர்வரிசை உடன் 100 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான சிவலிங்கம், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் மலையரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் நூறு கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் அணிவித்து, தயிர், புளி, எலுமிச்சை உள்ளிட்ட ஐந்து வகையான சாதங்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி