சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்து, சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவர்களின் பணிகள் குறித்து கேட்டறிந்தார். சில வார்டுகளில் தரைத்தளம் சேதமடைந்திருந்ததால், நோயாளிகள் வெளிப்பகுதியில் படுக்கை போடப்பட்டிருந்தது. சேதமடைந்த டைல்ஸ் கற்களை உடனடியாக சரிசெய்ய ஆட்சியர் அறிவுறுத்தினார்.