சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட ஜேகே நகர் பகுதியில் சேர்ந்தவர் கிருஷ்ண மோகன். இவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 28 பவுன் தங்க நகை மற்றும் மூன்றரை லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து அப்பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் வீட்டினுள்ளே சென்று திருடி சென்று இருப்பது தெரிய வந்தது. இது குறித்து ஆத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு