இதுகுறித்து ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் புகார் அடிப்படையில் நகர போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பட்டப்பகலில் முகமூடி அணிந்த வந்த இரண்டு இளைஞர்கள் நோட்டமிட்டு இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அதே பகுதியில் ஓய்வுபெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் இருசக்கர வாகனம் திருடு போயிருப்பதும், தொடர்ந்து அப்பகுதியில் இருசக்கர வாகனம் திருடப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.