உடனடியாக அப்பகுதி மக்கள் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் நகரப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டதில் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் போனது தெரியவந்தது. மேலும் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது அதிகாலை 3 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கோவிலின் கேட்டைக் கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்று உண்டியலைத் திருடிச் சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது கோவிலின் உண்டியலைத் திருடிச் சென்ற சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்