கடந்த அக்டோபர் 21ஆம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டிருந்த சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்களைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கொலை மிரட்டல் விடுத்ததாக வெங்கடேசன் (37) மற்றும் தமிழ்ச்செல்வன் (29) ஆகிய இருவர் ஆத்தூர் நகர போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வடுகத்தம்பட்டியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கார் மீது அன்புமணி ஆதரவாளர்கள் தாக்கிய விவகாரத்தில் ஏற்கெனவே ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.