சேலம்: அரசு, தனியார் பஸ்கள் மோதல்...10 பேர் காயம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வெள்ளாள குண்டம் பிரிவு ரோட்டில் நேற்று(செப்.2) சேலத்தில் இருந்து திருமனூர் சென்ற அரசுப் பேருந்து வெள்ளாள குண்டம் பிரிவு ரோட்டில் திரும்பியது. அப்போது ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக அரசு பேருந்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து அருகிலிருந்தவர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வாழப்பாடி காவல் துறையினர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி