கோபமடைந்த வேடராஜன் வனிதாவை கீழே தள்ளி மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் கழுத்தை சரமாரியாக அறுத்து தானும் தனது கையை அறுத்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் வேடராஜனை துரத்தியுள்ளனர். காயம் அடைந்த வனிதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாழப்பாடி போலீசார் வேடராஜனை பிடித்து வாழப்பாடி மருத்துவமனையில் கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்