சேலம் மாவட்டம் ஆத்தூரில் தனியார் நிதி நிறுவனம் சார்பில், குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு துவங்கிய இந்தப் பேரணி, உடையார்பாளையம், நான்கு ரோடு சந்திப்பு, பேருந்து நிலையம், ராணிப்பேட்டை வழியாக புதுப்பேட்டையில் நிறைவடைந்தது. தனியார் பள்ளி மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைகளில் பதாகைகளுடன் பங்கேற்று, செல்போன் பயன்பாட்டினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.