இந்நிலையில் பொய்யான செய்தியை வெளியிட்டதாக தனியார் தொலைக்காட்சி மீது ஆத்தூர் டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொய்யான செய்தியை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சியை கண்டித்து ஆத்தூர் மணிக்கூண்டு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மண்டல துணை செயலாளர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தனியார் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்களை எழுப்பினர். மேலும் தனியார் தொலைக்காட்சியின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த துண்டறிக்கைகளை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.