ஆத்தூர்: விவசாயிகள் போராட்டம்; பெண் விவசாயி சஸ்பெண்ட்

சேலம் மாவட்டம் ஆத்தூர் உழவர் சந்தையில், சக விவசாயி தரை குறைவாக பேசியதாக எழுந்த புகாரில், மஞ்சுளா என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்யாமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உழவர் சந்தை அலுவலரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சேலம் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் சுஜாதா, விவசாயி மஞ்சுளாவை ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி