சேலத்தில் 17 வயது மாணவி கர்ப்பம்: இளைஞர் மீது வழக்கு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. மாணவியின் வாக்குமூலத்தின்படி, 24 வயது இளைஞருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மகளிர் காவல் நிலைய போலீசார் அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி