ஆத்தூர்: போதையில்லா தமிழகம் மினி மாரத்தான்

சேலம் மாவட்டம், ஆத்தூரில் தனியார் கல்லூரி சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் என இரு பிரிவுகளாக நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த மினி மாரத்தான் போட்டியை ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அருட்தந்தை அருளப்பன், தனியார் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் கொடியைத்து தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து மினி மாரத்தான் ஓட்டமானது புனித மரியாள் ஆர். சி. பள்ளியில் தொடங்கி நகரில் ராணிப்பேட்டை, கடைவீதி, காமராஜர் சாலை, சாரதா ரவுண்டானா சாலைகள் வழியாக புனித ஆர். சி. பள்ளியில் முடிவடைந்தது. 

மாரத்தான் ஓட்டத்தில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு மாரத்தானில் முதல் பரிசு ரூ. 10,000 ரூபாயும் இரண்டாம் பரிசு 7,000, மூன்றாம் 5,000 ரூபாய், மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி