ஆத்தூர்: பொள்ளாச்சி புகழ் கள்ளக்கூட்டணி வாசகம் போஸ்டர் பரபரப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் மாணவிக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் சேலம் மாவட்டம், ஆத்தூர், நரசிங்கபுரம், பெத்தநாயக்கன்பாளையம், கொத்தாம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு மாணவர் மன்றம் மாணவர் பிரிவு என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து அரசாங்கம் எங்களை படிக்க அனுப்புகிறது. 

பொள்ளாச்சி புகழ் கள்ளக் கூட்டணியை மூட்டி பொண்ணுங்க படிப்பை நிறுத்த பாக்குது "Save Girls Education" என்ற வாசகத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உருவத்தை அசுரன் போல் சித்தரித்தும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவுக்கால் அடித்துக் கொள்வது போன்று புகைப்படம் உள்ளது. இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி