ஆத்தூர்: பாமக சுவர் விளம்பரம் அழிப்பு; வாக்குவாதம் பரபரப்பு

சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வருகிற மே 11ம் தேதி சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாடு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சுவர் விளம்பரங்கள் எழுதும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பால பகுதியில் பாமகவினர் சுவர் விளம்பரம் எழுதியுள்ளனர். 

நெடுஞ்சாலைத்துறையினர் மேம்பாலப் பகுதியில் எழுதப்பட்ட சுவர் விளம்பரத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தகவல் அறிந்து வந்த பாமகவினர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் முற்றுகையிட்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சிறைப்பிடித்தனர். மேலும் சுவர் விளம்பரம் எழுதுவதற்கு முன்னரே தகவல் தெரிவித்திருந்தால் நாங்கள் எழுதாமல் இருப்போம் என்றும், தற்போது ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் செலவு செய்து எழுதப்பட்ட சுவர் விளம்பரத்தை அழிக்கக் கூடாது எனவும், எங்களுக்கான தொகையை வழங்கி பின்னர் அழிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி