சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடியில், பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தனிநபர்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்தனர். வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கிய நிலையில், இன்று பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.