இது தொடர்பாக அந்தப் பெண் சேலம் கலெக்டர் பிருந்தாதேவியிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரைய்டுத்து கலெக்டர் விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டார். கடந்த 7ம் தேதி, ஊரக வளர்ச்சித் துறை தணிக்கையாளர் மதுமிதா, கூடுதல் திட்ட அலுவலர் நந்தினி ஆகியோர், ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் விசாரணை செய்து, அதன் அறிக்கையை சேலம் கலெக்டரிடம் வழங்கினர்.
இதைத் தொடர்ந்து, ஆத்தூர் பி.டி.ஓ., பரமசிவம், அவருக்கு உதவியாளராக இருந்த அலுவலக உதவியாளர் கணேசன் ஆகியோரை சேலம் கலெக்டர் சஸ்பெண்ட் செய்து, அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.