ஆத்தூர் மாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கால் புவனூர் திருவள்ளுவர் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நிறைவடைந்ததை அடுத்து, மண்டல பூஜைக்காக இன்று 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஊர்வலமாகச் சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். மேளதாளம் மற்றும் வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பெண்கள், கோவிலில் அம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்து, வண்ணமலர் அலங்காரத்தில் அம்மனை தரிசனம் செய்தனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி