ஆத்தூர் மகாசக்தி மாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பழைய வீட்டு வசதி நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ செல்வகணபதி ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் திருக்கோவில் தேர் திருவிழா கடந்த 16ஆம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு பம்பை, மேளதாளத்துடன் பால்குடம், மஞ்சள் நீர், தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி