ஆத்தூர்: 2 நாட்களுக்கு பின் கூலிதொழிலாளி உடல் அடக்கம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முல்லைவாடி பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 6-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. வேளாண் அலுவலர் நாகராஜன் தரைக்குறைவாக பேசியதால் நாகராஜன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்து, சாலை மறியலில் ஈடுபட்டார். இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உடலை அடக்கம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி