சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், 81 கௌரவ விரிவுரையாளர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளைப் புறக்கணித்து மாநிலத் துணைத் தலைவர் வசந்தகுமார் தலைமையில் நுழைவாயில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் கோரிக்கைகளில் 12 மாத சம்பளம், UGC நிர்ணயித்தபடி மாத ஊதியமாக ₹57,800, மகப்பேறு விடுப்பு, ஓய்வு பெற்றவர்களுக்கு ₹25 லட்சம் பணிக்கொடை, மற்றும் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் ஆகியவை அடங்கும். விரிவுரையாளர்கள் கைகளில் பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.