சேலம்: சுரங்கப்பாதையில் பேருந்து பழுது; பயணிகள் அவதி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராசிபுரம் பிரிவு சாலையில் ரயில்வே மேம்பாலப் பணிகளால் போக்குவரத்து சுரங்கப்பாதை வழியாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், நாமக்கல்லில் இருந்து ஆத்தூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து சுரங்கப்பாதையின் அடியில் பழுதாகி நின்றதால், 30க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மாற்றுப் பேருந்து வசதி செய்து தரக்கோரி நடத்துனரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி