ஆத்தூர்: அரசு மதுபாட்டில் பதுக்கி விற்பனை செய்த 2 பேர் கைது

சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மதுபாட்டில் சட்டவிரோதமாக பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக எழந்த புகார் அடிப்படையில் ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் உத்தரவின் பேரில் ஆத்தூர் நகர போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுப்பேட்டை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அரசு மதுபாட்டில்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரிய வந்தது.

விசாரணையில் அண்ணாதுரை மகன் நாகராஜ் அம்பேத்கர் நகர், புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் என்பதும் மற்றும் ராமு மகன் பிரபு முல்லைவாடி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து அரசு மதுபாட்டில்களை பறிமுதல் செய்து இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி