சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியில், 2025 ஆம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒப்பந்த தூய்மை பணியாளர் காளிதாஸ், தனக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி, மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த நகராட்சி ஆணையாளர், ஒப்பந்ததாரரிடம் இதுகுறித்து பேசி கோரிக்கையை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.