ஆத்தூர் விவசாயிகள் ஆர்டிஓ ஆபீஸ் முற்றுகை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பகுதியில் தனிநபர் ஒருவர் விவசாய நிலப்பகுதியில் உள்ள ஓடையை ஆக்கிரமித்து பாலம் கட்டுவதாகவும், வீட்டுமனை அமைக்கப்பட்ட இடத்திலிருந்து கழிவு நீரை விடுவதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பலமுறை வருவாய் துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் பணிகள் நிறுத்தப்படாமல் நடைபெற்று வருவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்பதாக எச்சரித்தனர். இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி