சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசநத்தம் கிராமத்தில், மதுபோதையில் சாக்கடையில் தவறி விழுந்து காயமடைந்த கூலித்தொழிலாளி அண்ணாதுரை (24ஆம் தேதி) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மல்லிகரை போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.