ஆத்தூர்: Z பிளஸ் பாதுகாப்புடன் வந்த இபிஎஸ்

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு Z பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அமம்பாளையத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி Z பிளஸ் பாதுகாப்போடு வருகை தந்தார். அவருக்கு 13 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் துப்பாக்கி, பாதுகாப்பு உபகரணங்களுடன் வந்திருந்தனர். எடப்பாடி பழனிச்சாமி நாளை சுற்றுப்பயண பிரச்சாரத்தை தொடங்க உள்ள நிலையில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி