ஆத்தூர் மாவட்ட சிறை பங்களாதேஷ் சிறப்பு முகாமாக மாற்றம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட சிறை செயல்பட்டு வந்தது. 200 கைதிகள் வரை அடைக்கப்படும் வசதி இருந்தும் கைதிகள் எண்ணிக்கை குறைந்ததால் கடந்த பிப்ரவரி 28ம் தேதி சிறையில் இருந்த கைதிகள் அனைவரும் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டு சிறை மூடப்பட்டது. 

இந்நிலையில் வருவாய்த்துறை கட்டுப்பாட்டிற்கு இருந்துவந்த மாவட்ட சிறை வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அடைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு சிறப்பு முகாமாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. வங்கதேசத்தினர் சிறப்பு முகாமாக ஆத்தூர் மாவட்ட சிறை மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச நாட்டைச் சார்ந்த 9 ஆண்கள், 10 பெண்கள், 9 குழந்தைகள் என 28 பேர் சென்னை புழல் சிறையில் இருந்து மூன்று மாத சிறைத் தண்டனை முடிந்த பின் நேற்று (ஜூலை 30) இரவு ஆத்தூர் மாவட்ட சிறையில் உள்ள சிறப்பு முகாமிற்கு கொண்டு வரப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி