சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு பட்டியலில் 2,20,568 வாக்காளர்கள் இருந்த நிலையில், இறுதி பட்டியலில் 2,26,481 வாக்காளர்கள் உள்ளனர். வரைவு பட்டியலில் இருந்து 8555 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். வருவாய் கோட்டாச்சியார் தமிழ் மணி முன்னிலையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் அனைத்து கட்சி பொறுப்பாளர்களும் பங்கேற்றனர். டிசம்பர் 19 வரைவு பட்டியல் வெளியீட்டிற்குப் பிறகு, பிப்ரவரி 23 அன்று இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.