சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிப்பறையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தனிநபர் ஒருவர் நடத்தி வரும் இந்த கழிப்பிடத்தின் நுழைவாயில் பகுதியில் கேமரா இருப்பதால், இயற்கை உபாதை கழிக்க செல்வோர் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து உடனடியாக சிசிடிவி கேமராவை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.