ஆத்தூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 18 வியாபாரிகள் மஞ்சளில் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்தனர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக 12,589 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 16,599 ரூபாய்க்கும், உருண்டை மஞ்சள் குறைந்தபட்சமாக குவிண்டால் 11,189 ரூபாய்க்கும் அதிகபட்சமாக 13,599 ரூபாய்க்கும், பனங்காலி மஞ்சள் (தாய் மஞ்சள்) குவிண்டால் குறைந்தபட்சம் 25,789 அதிகபட்சமாக 29,159 ரூபாய் விலை போனது.
4597 மஞ்சள் மூட்டைகள், மொத்த குவிண்டால் 2770.48 மூலம் ரூ.3 கோடியே 76 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வாரத்தை காட்டிலும் மஞ்சள் வரத்து ஆயிரம் மூட்டை குறைந்த நிலையிலும் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாததால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.