அப்போது பள்ளி சீருடையில் தனது துப்பட்டாவில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் மாணவி ஹரிணி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் மாணவியின் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் தகவல் அளித்த நிலையில் தொடர்ந்து மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மாணவி உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இதுகுறித்து ஆத்தூர் நகர போலீசருக்குத் தகவல் தெரிவித்தனர்.
நிகழ்விடத்திற்கு வந்த ஆத்தூர் நகர போலீசார் மாணவி உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை செய்துகொண்டிருப்பதற்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் தந்தை "எதற்காக தற்கொலை செய்து கொண்டாய்" என கண்ணீரோடு கதறியது அங்கிருந்த பொதுமக்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.