ஆத்தூர் 10 அம்ச கோரிக்கை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகம் முன்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி அமைச்சுப் பணியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி