தம்மம்பட்டியைச் சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சௌந்தர் (26). திருச்சியைச் சேர்ந்த கங்காதரன் (26) உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சௌந்தர், ஸ்டாலின், ரகுநாத், கங்காதரன் உறவினர் செல்வி உட்பட 7 பேர் ஒரே ஆம்புலன்ஸில் சேலம் தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். கருத்துராஜபாளையம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த டிராக்டர் மீது மோதி ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.