தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் மூன்று நாட்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் டாஸ்மாக் கடைகள் இன்று (மே 29) திறக்கப்பட்டன. மூன்று நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட கடைகளில் மதுபானங்கள் அமோகமாக விற்பனையாகின. மது பிரியர்கள் உற்சாகத்துடன் மதுக்கடைகளில் குவிந்தனர். கடைகளில் தடுப்பு கட்டைகள் அமைத்து பாதுகாப்புடன் விற்பனை நடைபெற்றது.