சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுகொத்தாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவிலில் திருத்தேர் விழா நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி சக்தி அழைத்தல், காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி, சுவாமிகள் கண்திறப்பு, பொங்கல் வைத்தல், கிடா, கோழி வெட்டுதல் நிகழ்ச்சியும், அருள்மிகு ஸ்ரீசக்தி செல்லியம்மன் திருத்தேர் விழா வெகு விமரிசையாக நடைபெற்று முடிவடைந்தது.
நேற்று மாலை இன்று அலகு குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமிகளின் வேடமணிந்தும், கத்தி அலகு, நாக்கு அலகு, தேர் அலகு, கம்பி அலகு குத்தியும், ஏராளமான பெண்கள் தீச்சட்டி பூங்கரகம், மாவிளக்கு எடுத்தும், கேரளா சென்ட மேளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.