நடிகர் விஜயின் பிரச்சார வாகனம் விபத்தில் இருந்து தப்பியது

தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று சேலத்தில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நேற்று மாலை தலைவாசல் வழியாக சேலம் வந்த நடிகர் விஜயின் பிரச்சார வாகனம், தலைவாசல் சுங்க சாவடி அருகே ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று ஓரம் கட்டி நிறுத்த முயன்ற போது, இடது பக்கம் சாலையிலிருந்து வந்த டாடா ஏசி வாகனத்தின் மீது மோதுவது போல் சென்றது. இரு ஓட்டுனர்களின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி