ஆத்தூர்: வாலிபர் மீது ரயில் மோதி உடல் சிதறி உயிரிழப்பு

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட தெற்கு காடு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் சஞ்சீவி (25) கட்டிடக்கூலி தொழிலாளியான இவர் நேற்று (பிப்ரவரி 15) இரவு பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார். 

சேலம் - விருதாச்சலம் ரயில் வழித்தடத்தில் உள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற விரைவு ரயில் சஞ்சீவி மீது மோதி விபத்துக்குள்ளானதில் சஞ்சீவி உடல் சிதறி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலைக் கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை.

தொடர்புடைய செய்தி