சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உடையார்பாளையம் சென்றபோது, புதுப்பேட்டையில் பூக்கடை வைத்துள்ள நல்லதம்பி (37) என்பவர், எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் அவரது கால் முறிந்து பலத்த காயமடைந்தது. அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.