சேலம் மாவட்டம் ஆத்தூர் வைத்தியகவுண்டன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது கோகுல்ராஜ், புதிய இருசக்கர வாகனத்தில் தனது அக்காவிடம் காண்பிக்கச் சென்றபோது, சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை தளவாய்பட்டி பிரிவு சாலை அருகே தடுப்பு கம்பியில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் தலைக்கவசம் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.