தலைவாசல்: பட்டா வழங்க குடும்பத்துடன் குடியேறி நூதன போராட்டம்

சேலம் மாவட்டம், தலைவாசல் பட்டுத்துறை கிராமத்தில் 25க்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, 50க்கும் மேற்பட்டோர் கால்நடைகளுடன் வட்டாட்சியர் வளாகத்தில் குடியேறி உணவு சமைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக பட்டா வழங்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என வேதனையுடன் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி