ஆத்தூர் கேட்பாரற்று கிடந்த 9 நாட்டு துப்பாக்கி பறிமுதல்

சேலம் மாவட்டம் வாழப்பாடி கருமந்துறையில், திமுக நிர்வாகி ராஜேந்திரன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையின் போது வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த 9 நாட்டு துப்பாக்கிகளை கண்டெடுத்துள்ளனர். இந்த துப்பாக்கிகளின் உரிமையாளர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி