ஆத்தூர் அடுத்த ஏத்தாப்பூர், வடுகம்பட்டி கிராமத்தில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது, அன்புமணி மற்றும் ராமதாஸ் தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. அன்புமணி தரப்பு அளித்த புகாரின் பேரில், சேலம் பாமக எம்எல்ஏ அருள், மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் சங்கர், அருண், குமரவேல், விஜயகுமார் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பாமக எம்எல்ஏ அருள் உட்பட 12 பேர் ஆத்தூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.