சேலம் மாவட்டம் ஆத்தூர் வசிஷ்ட நதிக்கரையோரம் உள்ள சம்போடை வனப்பகுதியில் பழமையான சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மன் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் 108 தீபலட்சுமி திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு காலையில் விநாயகர் பாலசுப்பிரமணியர் மற்றும் மதுரகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்யப்பட்டு 108 தீபாலட்சுமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. உலக நன்மைக்காக மஞ்சள், குங்குமம், பூ உள்ளிட்டவை வைத்து ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.