சேலம்: கரும்பு தோட்டத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு- வீடியோ

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தென்னங்குடி பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மாரியம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் காளியண்ணன் இவர் தனது விவசாய தோட்டத்தில் கரும்பு அறுவடை நேரம் என்பதால் இன்று காலை 20க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் விவசாய கரும்பை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சரசரவென ஊர்ந்து செல்லும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் சற்று கவனத்துடன் பார்த்த பொழுது 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து பணியாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர். உடனடியாக ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாய நிலத்தில் சுமார் ஒரு மணி நேரம் போராடியதிற்குப் பின் லாபகமாக 10 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் மலைப்பாம்பை வனத்துறையிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி