தவெக சேலம் மாவட்ட செயலாளருக்கு ஜாமீன்

தமிழக வெற்றிக் கழக சேலம் மாவட்ட செயலாளார் வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.  கரூரில் விஜய் பரப்புரையின்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த வழக்கு விசாரணை இன்று (அக்.17) நடைபெற்ற நிலையில், வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, கரூர் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் விடுதலை செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி