வேலூர் மாவட்டம் பொன்னை கணேஷ் நகரில் பெண் ஒருவரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரேசன் என்பவர் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தது தொடர்பாக சின்னபொண்ணு என்ற பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இருந்தபோதிலும், போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில், புகார் அளித்த அப்பெண் மீது குமரேசனின் கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது.
நன்றி: Newstamil24x7