கலப்பட மணல் விற்பனை.. 15 இடங்களில் சீல்

சென்னையில் சட்டவிரோதமான முறையில் கலப்பட மணல் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கனிம வளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது, கலப்பட மணல் விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்ட 15 இடங்களை அதிகாரிகள் கண்டறிந்து அவற்றுக்கு உடனடியாக சீல் வைத்தனர். சட்டவிரோத மணல் விற்பனையை முழுமையாகத் தடுக்கும் நோக்கில், இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: News18

தொடர்புடைய செய்தி

✕
✕