தொண்டி அருகே விறுவிறுப்பாக நடைபெற்ற பாய்மரப் படகு போட்டி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை கிராமத்தில், கோயில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு பாய்மரப் படகு போட்டி நடைபெற்றது. ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 26 பாய்மர படகுகளில் 182 போட்டியாளர்கள் கலந்துகொண்டு 6 கடல் மைல் தூர இலக்கை நோக்கி போட்டியிட்டு சீறிப்பாய்ந்தனர். கிராம தலைவர் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕