பாலிவுட்டில் அறிமுகமான 'ஏக் தின்' திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்த நிலையில், நடிகை சாய் பல்லவிக்கு தற்போது மற்றொரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. சுமார் ரூ.4000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'ராமாயணா' படத்தில் சீதையாக நடிக்கும் சாய் பல்லவியின் இந்தி உச்சரிப்பு குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்ததால், அவருக்கு பதில் வேறு ஒருவரின் குரலை டப்பிங்கிற்கு பயன்படுத்த படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.